24 மணித்தியாலத்திற்குள் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

0 4

 இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (24) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது.

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் இந்த சடுதியான உயர்வு பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியாக 292.25  ரூபாவாகவும், விற்பனை பெறுமதியாக 300.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 289.73 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.52 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மேலும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.03 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 314.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.78 ரூபாவாகவும் , விற்பனை பெறுமதி 210.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.14 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 189.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.