டில்வின் சில்வாவால் கட்சி உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

0 1

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனது அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார(Nalin Bandara)தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

”நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை “வைத்தியர்” என அடையாளப்படுத்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பிழையான தகவல்கள், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் அரசாங்கத்தின் கூற்றுக்கள் நாடாளுமன்ற அதிகாரிகளை மையப்படுத்திய சதித்திட்டத்தை முன்வைத்துள்ளது.

இதை அவர்கள் நாடாளுமன்ற அதிகாரிகளின் சதி என்று சித்தரிக்க முயன்றனர்.

ஆனால் அந்த ஆவணம் அவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து வந்தது என்பது இப்போது தெளிவாகிறது.

இப்போது என்ன சொல்வார்கள்?” இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பிலான விடயத்தை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நாணயக்காரவை அழைத்திருந்தேன்.

நீதியமைச்சர் தனது கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அவருக்கு கருத்து தெரிவிக்க கட்சியின் அனுமதி தேவை.

 ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin-Silva), தனது அனுமதியின்றி ஊடகங்கள் முன் தோன்ற கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளார்’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.