கந்தளாயில் அதிகரிக்கும் குரங்கு தொல்லை: தீர்வை பெற்று தர கோரும் பொதுமக்கள்

0 2

அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருகோணமலை – கந்தலாய் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கண்டி பிரதான வீதி 91 ம் கட்டை சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24.12.2024) இடம்பெற்றுள்ளது.

“குரங்குகளை எங்காவது கொண்டு சென்று விடுங்கள் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்கள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தினமும் கொத்து கொத்தாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் கந்தளாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருவதுடன் இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கந்தளாய் , கந்தலாவே, வேன்றாசம் புர , பேராறு, மற்றும் பேராற்று வெளி  பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெற்களை சேதப்படுத்துவதும், கடைகளில் காட்சிபடுத்தபட்டுள்ள பொருட்களை நாசப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களையும் உண்டு வீணாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்கள் பொருட்களை எடுத்துசெல்லும் போது கைகளில் உள்ள உணவு பொதிகளை பிடுங்குவதாகவும் இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பல இடர்களை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில் கவனம் செலுத்தி பயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

Leave A Reply

Your email address will not be published.