புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான யோசனை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும்.
புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குகின்ற ஒரு முறைக்கு செல்வதையே நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். எனவே நாம் அதனை செய்வோம்.
இதேவேளை, தற்போது மக்கள் எதனை கோரகின்றனர் என்பது தெளிவானது. பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வர வேண்டும். மக்களின் உரைிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அரசாங்கமாக நாங்கள் இன மற்றும் மதவாதத்திற்கு எதிராக செயற்படுகின்றோம். அந்த நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.