இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவர் ஹெச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener) மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (S.Rasamanickam) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆகியோருக்கிடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனேடிய (Canada) வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் (Weldon Epp) உள்ளிட்ட கனேடிய அரசியல் தரப்பினர்களை சந்தித்த யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.