இலங்கைக்கு படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் : எந்த இடத்திற்கு தெரியுமா !

0 3

அம்பாறை, அறுகம் குடா (Arugam Bay) பகுதியிற்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அறுகம் வளைகுடாவின் நிலைமை சீராக உள்ளது அங்கு பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை.

மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவாக வருகை தர ஆரம்பித்துள்ளனர் அத்தோடு பிரித்தானியாவும் தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவே, விரைவில் இதன் தகவல்களை வெளியிடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.