கல்கிஸை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த இரண்டு விபசார விடுதிகள் நேற்று(18) சுற்றி வளைக்கப்பட்டு ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை காவல்துறை நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் செயற்பட்டுவந்துள்ளன.
கைது செய்யப்பட்ட பெண்கள் மாத்தளை, யக்கலமுல்ல, மாவனெல்ல, பெந்தர மற்றும் பாணந்துறை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 24 மற்றும் 43 வயதுடையவர்கள் ஆவர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.