சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி தையிட்டியில் போராட்டம்

17

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (13) பிற்பகல் ஆரம்பமான போராட்டம் இன்று (14) மாலை வரை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தையிட்டியில் காலங்காலமாக விகாரைக்கென காணி ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட அந்தக் காணியில் கட்டாமல் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இந்த விகாரை கட்டப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

குறித்த விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த இப்போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி தையிட்டியில் போராட்டம் | Protest To Remove Illegal Vihara In Thaiyiddi

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பொது மக்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Comments are closed.