வவுனியாவில் காவல்துறையினர் திடீர் சோதனை: பலருக்கு எதிராக வழக்கு பதிவு

7

வவுனியா(vavuniya) நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில் அதிகரித்து வருகின்றது. இதனையடுதது வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பவற்றில் வவுனியா காவல்துறையினர் இன்று (08.12) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது, ரயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என பல இடங்களில் காணப்பட்டதுடன், அவற்றில் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகளும் இனங்காணப்பட்டன.

அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதேவேளை, டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தமது அயல் பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.