கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 தமிழக கடற்றொழிலாளர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை, இந்தியாவின் (India) இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நீதி கோரி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது, மீண்டும் 08 கடற்றொழிலாளர்கள் (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2024ஆம் ஆண்டில் மட்டும் தமிழக கடற்றொழிலாளர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 8 இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலச்சந்திரன் முன்னிலையில் அவர்கள் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.