ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு : வவுனியாவில் சம்பவம்

5

வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை (06.12.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர்ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த மற்றொருநபர் சம்பவம் தொடர்பாக ஊர்மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து குறித்த நபரை தேடும்பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது. நீண்டநேரமாக தேடுதல் இடம்பெற்றுவந்த நிலையில் சிலமணிநேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியை சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Comments are closed.