சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் (Anuradhapura), பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் டுபாயிலிருந்து (Dubai) இன்றைய தினம் அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 100 சிகரட்டு கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு (Negombo) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.