அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பான தகவலை சமகால அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.
அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
362 அனுமதிப் பத்திரங்களில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.
மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்குதியில் வழங்கப்பட்டுள்ளன.
Comments are closed.