நாட்டில் எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசியை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே நேற்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு பெறுமதி சேர்க்கும் உற்பத்திகளுக்கு நாட்டு அரிசியைப் பயன்படுத்துவதால், நுகர்வுக்குத் தேவையான இருப்புகளில் தட்டுப்பாடு நிலவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
உர மானியத்தைத் தேசிய உற்பத்திக்கான செயல்திறனுடன் பயன்படுத்தும் நோக்கில் QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் வர்த்தகம்,வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe), லக் சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா மற்றும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.