சிக்குவாரா பிள்ளையான்…! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம்

11

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக வெளியான சனல் 4 காணொளி குறித்து வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் காலை வாக்குமூலம் வழங்க வந்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 5 மணி நேரத்தின் பின்னர் வாக்குமூலம் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்.

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 (Channel 4) தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Comments are closed.