நீண்ட வார விடுமுறை: தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல்

15

நீண்ட வார விடுமுறை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மக்களின் கொழும்புக்குத் (Colombo) திரும்பும் பயணத்தை எளிதாக்கும் வகையில் விசேட தொடருந்து சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, திங்கள் (18) மற்றும் செவ்வாய் (19) ஆகிய இரு தினங்களில் விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நாட்களில் வழக்கமான திட்டமிடப்பட்ட சேவைகளுடன் கூடுதலாக தொடருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பு கோட்டை மற்றும் பதுளை, கண்டி மற்றும் கொழும்பு கோட்டை, பெலியத்த மற்றும் கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை மற்றும் ஹிக்கடுவ, மாத்தறை மற்றும் கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை மற்றும் காலி ஆகிய இடங்களில் குறித்த இரண்டு நாட்களிலும் சேவைகள் இடம்பெறும்.

மேலும், சமுத்திரா தேவி தொடருந்து மாத்தறை தொடருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 3:50 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மற்ற அலுவலக தொடருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.