கம்பஹா மாவட்டத்தில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் விஜித ஹேரத் (Vijitha Herath), இவ்வருட பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் 898,759 வாக்குகளையும் அதில் விஜித ஹேரத் 716,715 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இவ்வருடம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து விஜித ஹேரத் பெற்ற விருப்பு வாக்குகள் வரலாற்றில் இடம்பெறும்.
இந்த நிலையில், இதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் பெற்ற 655,289 விருப்பு வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.
எனினும், சற்று முன்னர் கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளை பெற்று பிரதமர் ஹரிணியின் விருப்பு வாக்கு எண்ணிக்கையும் கடந்து வரலாறு படைத்துள்ளார்.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த முன்னாள் மகிந்த ராஜபக்சவின் சாதனையை இம்முறை பிரதமர் ஹிரிணி முன்னதாகவே தகர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.