வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்றையதினம் (15.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “விகிதாசாரத் தேர்தலின் கீழ் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், வெற்றிக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றிகள்.
விசேடமாக பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாத வடமாகாண மக்கள், இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு நன்றிகளை தெரவித்துக்கொள்கிறேன்.
மக்கள் வழங்கிய பெரும்பான்மையான அதிகாரத்தை மக்களின் நன்மைக்காக அர்ப்பணித்து மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்போம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
Comments are closed.