யாழில் தமிழரசுக் கட்சிக்கு எத்தனை ஆசனங்கள்…! முழுமையான தேர்தல் முடிவு வெளியானது

13

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 80,830 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள ஆசனங்கள்

மேலும், இலங்கை தமிழரசுக் கட்சியினர் 63,327 வாக்குகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.

அத்துடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 27,986 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17 இல் களமிறங்கிய தரப்பினர் 27,855 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 593,187 ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 358,079

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 325,312

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 32,767 ஆகும்.

கடந்த தேர்தலில்…
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 112,967 வாக்குளையும் 03 ஆசனங்களையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 55,303 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் 49,373 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் 45,797 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

கோப்பாய் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 9570 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4047 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 3025 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 2743 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2679 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 2994 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2627 வாக்குகளைப் பெற்றுள்ளனர்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2423 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1801 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 7566 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 3036 வாக்குகளை பெற்றுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2111 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1878 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1472 வாக்குகளைப் பெற்றுள்ளனர்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1400 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 5850 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3729 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 3705 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1979 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1877 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 5,978 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,901 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4,600 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2,086 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பு கட்சியினர் 1,567 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1,300 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,467 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4,022 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1,980 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1,572 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1,345 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 10,059 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4386 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 3443 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2751 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 2413 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 23,293 வாக்குகளை பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 8717 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 8554 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 2098 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1497 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஊர்காவற்றுறை

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 3296 வாக்குகளை பெற்றுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 2626 வாக்குகளை பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 2116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

யாழ்.நல்லூர் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 8,831 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணி 3,527 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 3,228 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,396 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17இல் களமிறங்கியவர்கள் 2,279 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 5,681வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 4,808 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17இல் களமிறங்கியவர்கள் 3548 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2623 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1885 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 9,066 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 2,582 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1,361 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி 1,124 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.