மட்டக்களப்பு வாகரையில் பூதவுடலை ஏற்ற மறுத்த அரசியல் கட்சியின் அமரர் ஊர்தியால் புதிய சர்ச்சை

4

மட்டக்களப்பு வாகரை பகுதியில் முக்கிய தமிழ் கட்சி ஒன்றின் இளைஞர் அணி தலைவரின் தந்தை வாகன விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு சொந்தமான அமரர் ஊர்தியில் ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வாகரை பிரதேசத்தில், குறித்த காவு வண்டி ஒன்றை வாகரை வைத்தியசாலை வளாகத்தினுள் சில காலமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, முக்கிய தமிழ் கட்சி ஒன்றின் இளைஞர் அணி தலைவரின் தந்தை வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பூதவுடலை சட்ட வைத்திய நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை அனுப்பும்படி கட்டளையிடப்பட்டுள்ளது.

எனினும், பூதவுடலை கொண்டுசெல்ல தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு சொந்தமான அமரர் ஊர்தியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஓட்டமாவடியில் உள்ள வேறு ஒரு வண்டி மூலமே இந்த சேவை பெறப்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சகல மக்களுக்கும் சமமான சேவையை வழங்காத ஒரு தனியார் ஊர்தியை எவ்வாறு வாகரை வைத்திய அதிகாரியும், பிராந்திய பணிப்பாளரும் வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளேயே நிறுத்தி வைக்க அனுமதி வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Comments are closed.