2025 இல் கிடைக்கப்போகும் பாரிய சலுகைகள்: ஜனாதிபதியின் அறிவிப்பு

12

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சில உணவு மற்றும் பானங்களின் வற் மற்றும் வருமான வரி நியாயமான தொகையால் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் (Gampaha) தேசிய மக்கள் சக்தி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருட பொதுத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியினால் நடாத்தப்பட்ட தொடர் மக்கள் பேரணியின் இறுதிப் பொதுக்கூட்டம் கம்பஹாவில் நடைபெற்றது.

அதன் போது, டிசம்பரில் 04 மாத காலத்திற்கான குறைமதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் புதிய வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் புதிய திசையில் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சில உணவு மற்றும் பானங்கள் மீதான வற் வரியை முற்றாக நீக்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.