ரணில் அரசின் 18 அமைச்சர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

9

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்தமை தொடர்பில் கடந்த ரணில்(ranil) அரசாங்கத்தின் 18 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மருந்துகள் தேவையான பாதுகாப்பு மற்றும் உரிய தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மருந்துகளின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கிய அமைச்சரவையில் குறித்த அமைச்சர்கள் அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த தரமற்ற கொள்முதல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் நீண்ட நாட்கள் சிறையிருந்த நிலையில் தற்போதுதான் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.