யார் தம்மை இன அழிப்பு செய்கின்றார்களோ அவர்களுக்கே வாக்களிக்கும் ஒரு அதிசய இனமாக ஈழத்தமிழர்கள் இருப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 4 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றதால் யாழ்ப்பாணமே சுடுகாடாக மாறிய வரலாறு உள்ளது.
இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் ஆட்சியில் நடைபெற்றது.
எனினும், அந்த கட்சியின் கை சின்னத்தில் வாக்கு கேட்ட அங்கஜன் இராமநாதனுக்கே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலான வாக்குகளை வழங்கியிருந்தனர். இந்த அதிசயம் உலகத்தில் எங்கும் நடக்கவில்லை.
யார் தம்மை இன அழிப்பு செய்கின்றார்களோ அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை போன்று யார் இன அழிப்பு செய்தவர்களை பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கே ஈழத்தமிழர்கள் வாக்களித்து வருகின்றனர்.
Comments are closed.