மாணவர்களுக்கான விடுமுறை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

6

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரச பல்கலைக்கழகங்களின் கீழ் இல்லாத தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு ஆணைக்குழு கோருகிறது.

மேலும், மே 31, 2006க்கு முன் பிறந்து 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன் காரணமாக இந்த ஆண்டு கா.பொ.த. உயர்தரப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் வாக்களிப்பதில் இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து உயர்நிலைப் பயிற்சி வகுப்புகளின் மேலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments are closed.