வங்கி கணக்கினை ஆரம்பிக்க முடியாத இலட்சக்கணக்கான இலங்கையர்கள்

8

நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியாத நிலையில் இன்னும் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணத்தை பெற்றுக்கொள்ள பயனாளர்கள் முதலில் வங்கிக் கணக்கை திறக்க வேண்டும். வங்கிக் கணக்கினை தொடங்க முடியாதவர்கள் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் உள்ளனர்.

அடையாள அட்டை இல்லாமையே வங்கிக்கணக்கினை திறக்க முடியாததற்கு காரணம். ஆகவே தற்போது அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது.

மேலும் நிவாரணத்திட்டம் தொடர்பில் இரண்டு இலட்சம் முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மீண்டும் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய மேல்முறையீட்டுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவை கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்குரிய நீதி வழங்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.