அநுர தரப்பு வெளியிட்டுள்ள அபார நம்பிக்கை!

17

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விடவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர் வசந்த சமரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளை விடவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூடுதல் வாக்குகளை மக்கள் அளிப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் செய்து வரும் பிரசாரத்தில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய நாடாளுமன்றின் அமைச்சரவை எதிர்வரும் 17ஆம் அல்லது 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பும் அமைச்சரவை அதுவே என அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.