பிரேத பரிசோதனை முடிந்து பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்ட லியாம் பெயின் உடல்

7

நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, பிரபல பாடகர் லியாம் பெயின் உடல் இறுதியாக அவரது தாய்நாடான பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளது.

அக்டோபர் 16 அன்று அர்ஜென்டினாவில் உள்ள புவெனஸ் ஐர்ஸில் உள்ள ஒரு ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறி விழுந்து அவர் மரணம் அடைந்தார்.

திடீர் மரணத்தின் பின்னர், அவரது உடல் தற்காலிகமாக அங்கேயே வைக்கப்பட்டு, தன்னிச்சையான மரணம் என்பதை உறுதிசெய்ய பிரேத பரிசோதனை மற்றும் விஷப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

லியாம் பெயின் உடல் தாய்நாட்டிற்கு திரும்புவதில் தாமதம் ஆனதற்கு முக்கிய காரணம், அவருக்கு விஷம் ஏதும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது தான்.

பிரேத பரிசோதனையில் சில மருந்து வஸ்துக்கள் இருக்கக் கூடும் என்பதால் இந்தச் சோதனை கூடுதலாக நேரமெடுத்தது.

பேயின் உடலை திரும்பக் கொண்டு வர அவரது தந்தை ஜியோப் பேயின் மற்றும் அவரின் பாதுகாப்பு நிபுணர் அர்ஜென்டினாவில் இருந்தனர். அவரது உடல் அர்ஜென்டினா அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே விடப்பட்டது.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட வீடியோவில் அவரது உடல் புதன்கிழமை அன்று விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

லியாம் பெயினின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவரது நண்பர்களும், முன்னாள் ஒன் டைரெக்ஷன் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாயின் மரண விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மரணம் தொடர்பாக அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர்.

Comments are closed.