உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

7

2024ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை என்பன அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை என்பன தபால் மூலம் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தபால் மூலமாக அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், நவம்பர் 18ஆம் திகதி முதல் www.doenets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், வழங்கப்பட்ட அனுமதி அட்டையில், பெயர் உள்ளிட்ட திருத்தங்கள் இருப்பின், ஊடகம் மற்றும் பெயர் திருத்தங்கள் onlineexams.gov.lk/eic/index.php/clogin என்ற இணையதளத்தின் ஊடாக திருத்தங்களைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 18 நள்ளிரவு 12.00 வரை இவ்வாறு திருத்தங்களைச் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், எக்காரம் கொண்டும் பரீட்சை நிலையங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையில் மாத்திரம் கவனம் செலுத்துமாறும் பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.