அறுகம்குடா அச்சுறுத்தல்: பொலிஸ் மா அதிபரை சந்தித்த இஸ்ரேலிய அதிகாரி

5

கிழக்கின், அறுகம்குடாவில்(Arugam Bay Beach) அண்மையில் ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து இஸ்ரேலிய(Israel) பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் இலங்கை பொலிஸார் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை வந்துள்ள இஸ்ரேலின் பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர் ரோய் வக்னின், கொழும்பில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவைச் சந்தித்து கலந்துரையாடியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது, இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் இஸ்ரேலுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் இலங்கையின் அறுகம்குடா, காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில், பயங்கரவாத அச்சுறுத்தல்களை காரணம் காட்டி, அங்குள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை அறிவுறுத்தியிருந்தது.

அத்துடன்,அறுகம் குடா, காலி, ஹிக்கடுவ, வெலிகம மற்றும் அஹங்கம ஆகிய பிரதேசங்களில் உள்ள தமது நாட்டவர்களுக்கான அச்சுறுத்தலை 4 ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளதாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே இஸ்ரேலிய அதிகாரி, இலங்கையின் பதில் பொலிஸ் மா அதிபரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.