வெளிநாட்டில் இருந்து திருகோணமலைக்கு வருகை தந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

8

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் திருகோணமலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இன்று (05.11.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தனியார் மருத்துவமனை உரிமையாளரின் மனைவி (63வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

வெளிநாட்டில் இருந்து இன்று அதிகாலை வருகை தந்த குறித்த பெண் வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் உள்ள மூன்றாவது மாடியில் தனது அறையை திறப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போது அறைக்குப் பக்கத்தில் இருந்த மைத்துனரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்ட சந்தேகநபர் தனியார் மருத்துவமனையின் உரிமையாளின் சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி சந்தேகநபர் திருகோணமலை தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.