இலங்கை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் ஆதரவு: அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

7

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் நேற்று(04.11.2024) கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

எனினும் அதனை நிராகரிப்பதாக டில்வின் சில்வா கூறியுள்ளார்.

இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர் என டில்வின் சில்வா சுட்டிக்காட்டியள்ளார்.

எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments are closed.