அரச குடியிருப்புகளை ஒப்படைக்க தயங்கும் அரசியல்வாதிகள்

6

முன்னாள் அமைச்சர்கள் உட்பட நான்கு முன்னணி அரசியல்வாதிகள் இதுவரை தமது அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் அறிவிப்பின் படி இதுவரை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மொஹான் பி டி சில்வா, முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகள் இதுவரை கையளிக்கப்படவில்லை.

அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசிக்க நடவடிக்கை
மோகன் டி சில்வா பயன்படுத்திய குடியிருப்பு இன்று (5) கையளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வசித்து வருவதாகவும், பல தடவைகள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட போதிலும், அவர்கள் இன்னும் அங்கேயே தங்கியிருப்பதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7 பகுதியில் இந்த குடியிருப்புகளை அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.