இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கான 50 ரூபாய் என்ற விசேட பண்ட வரி விதிப்பு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடம் ஒன்றிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி கடந்த முதலாம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், வரி விதிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments are closed.