ரணிலுக்கு ஜே.வி.பி வழங்கியுள்ள ஆலோசனை

9

தேர்தலில் தோல்வி அடைந்தால் வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பை எப்படி மீறுவது என்பது பற்றிதான் ரணிலிடம் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல்களை ஒத்திவைத்த அவருக்கு ஜனநாயகம் பற்றி கதைப்பதற்கு உரிமை கிடையாது.

எனவே, அரசமைப்பு மற்றும் ஜனநாயகம் பற்றி எமக்கு ரணிலின் ஆலோசனை தேவையில்லை.

தேர்தலில் தோல்வி அடைந்தால் வீட்டில் இருக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் அரசியலுக்கு வந்து நகைச்சுவையாளராக மாற வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

Comments are closed.