லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

26

லிட்ரோ எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் விலையே நவம்பர் மாதமும் தொடரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக காணப்படுகின்றது.

5 கிலோ கிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகும்.

மேலும், 2.3 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாக காணப்படுகின்றது.

Comments are closed.