சந்தைக்கேற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! மக்களுக்கு வழங்கப்படும் அறிவுரை

5

அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்பட சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த தேர்தல்களில் கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கூட மக்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்திருந்தனர். எனவே, இம்முறை அவ்வாறான தவறான தெரிவுகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இளைஞர், யுவதிகள் மாற்றம் வேண்டும் என சிந்திக்கின்றனர். அதற்கமைய பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் தற்போது இழக்கப்பட்டுள்ளன.

எதிர்கால சந்ததியினரின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அனுபவமும் கல்வியறிவும் உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும்போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர். இது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்துவது சிறந்தாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.