அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சம்பள அதிகரிப்பை உறுதி செய்தது அநுர அரசாங்கம்

10

எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்திடம் பணம் இருந்திருந்தால் அப்போதே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை செய்திருக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இன்று மூன்று மாதங்களில் கவிழும் என்று பலர் கனவு காண்கின்றார்கள்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வரை எமது அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments are closed.