பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

7

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மக்கள் தங்களது உடமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பதில் காவல்துறைமா அதிபரால், சகல காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக மக்கள் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.