தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
பொதுவாக இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அதில் வெற்றிப்பெறும் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாரியளவில் வெற்றிப்பெறுவதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.
ஆனால், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற முடியாமல் இருக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் இந்த ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பது காட்டுகின்றது.
ஜனாதிபதி எதிர்கட்சியில் இருந்த போது தான் பதவிக்கு வந்தால் 48 மணித்தியாலயங்களில் பல மாற்றங்கள் செய்வதாக கூறினார். பல அதிசயங்கள் செய்யக்கூடிய திறமை என்னிடமும் தனது குழுவினரிடமும் இருப்பதாக கூறினார். ஆனால் இப்பொழுது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என கூறினார்.
இது தான் உண்மையான நிலைமை. பதவிக்கு வருவதற்கு முன்பும் எதிர்கட்சியில் இருந்துக் கொண்டும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.
Comments are closed.