பதவி வெறிக்காக சுமந்திரனுக்கு விலைபோன தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் : கடுமையாக சாடும் தவராசா

6

தமிழரசுக் கட்சியிலுள்ளவர்கள் பணத்திற்காகவும் மற்றும் பதவிக்காகவும் விலை போய் சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) எதிராக குரல் கொடுக்க தயங்குவதாக சட்டத்தரணி கே. வி தவராசா (K.v. Thavarasha ) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் (27) ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சியிலுள்ளவர்கள் தங்களை வளர்த்து கொண்டார்களே தவிர அவர்களுக்கு மக்கள் மீது துளி அளவும் அக்கறை இல்லை.

ஒரு தனிப்பட்ட நபரின் முடிவுக்கு கட்சியிலுள்ள அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு, இவர்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு முக்கியமான காரணம் பணமும் மற்றும் பதவி வெறியும் மட்டுமே.

சமஷ்டியை நாங்கள் கைவிட்டு விட்டோம், இதையெல்லாம் நான் அன்றே எடுத்து கூறினேன் சம்பந்தனுக்கு (R. Sampanthan), கட்சியின் தற்போதைய நிலைக்கு அவரும் பெரிய காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கட்சியின் வீழ்ச்சிக்கு தனி மனிதர் காரணமென்றால் அவரை கட்சியை விட்டு நீக்காமல் மற்ற அனைவரும் கட்சியை விட்டு விலகுவதற்கான காரணம் என்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு தவராசா பதிலளிக்கையில், “மத்திய குழுவில் இருக்கும் 41 பேரில் 31 பேர் இவருக்கு ஆதரவு, இவர் கொண்டு வந்த நிலையில்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.

அத்தோடு, அடுத்து இவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தாலும் அது நிலைக்குமா என்பது கேள்விக்குறி காரணம் அவர் மீது ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்படும் போது அவரது பதவி பறிபோவதற்கு வாய்ப்புள்ளது.

ஆகவே, அங்கு தனியே குரல் கொடுப்பது நான் மட்டும்தான், அத்தோடு பொது வேட்பாளரை ஆதரிப்பவர்களுக்க எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டமையும் திட்டமிடப்பட்ட செயல்.

கட்சியிலுள்ள ஏனைய அனைவரும், நான் எதிராக குரல் கொடுக்கும் போது அமைதி காத்தனர், கட்சியில் நீண்ட காலம் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் கூட பதவி மற்றும் பணத்திற்காக விலை போய்விட்டார்கள்.

திட்டமிடப்பட்டுதான் இந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது காரணம் இவர் விலகினாலும் இவருக்கு வேண்டப்பட்டவர் அடுத்து பதவிக்கு வருவார் இல்லையென்றால் தேசிய பட்டியல் மூலம் இவர் பதவிக்கு வருவார் ஆகவே இது தொடர்பில் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.