விசேட பகுதிகளில் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

7

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதாலேயே விசேட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு சபைக்கூட்டம் இடம்பெற்றபோதே, இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர், பொலன்னறுவை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று (23.10.2024) இடம்பெற்ற நிகழ்வின்போது குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஒக்டோபர் மாதத்திற்குள் பயங்கரவாத குழுக்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நிலைமை குறித்து அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரியந்த விஜேசூரிய கூறியுள்ளார்

Comments are closed.