தேங்காய் விற்பனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

15

நிலவும் தேங்காய் விலையை கருத்திற்கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது.

அதன் முதற்கட்டமாக கொழும்பு இன்று (23ஆம் திகதி) ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே, கடுவெல மாநகர சபைகளை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்போது, ஒரு தேங்காய், 100 முதல், 120 ரூபாய் வரை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலும், கிருலப்பனை பொது சந்தை மற்றும் நிதி அமைச்சின் வளாகத்திற்கு அருகில் நடமாடும் லொறிகள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு பத்தாயிரம் (10,000) தேங்காய்களை சந்தைக்கு சேர்க்கப்படும் என்றும், பின்னர் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஒரு நாளைக்கு  (5,000) தேங்காய்கள் படிப்படியாக சந்தைக்கு சேர்க்கப்படும் மற்றும் வாரத்திற்கு 15,000 தேங்காய்கள் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் ஒவ்வொரு நாளும் 1500 தேங்காய்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளதுடன், ஹலவட தோட்ட நிறுவனம் நாளை முதல் தினமும் 3000 தேங்காய்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

Comments are closed.