முல்லைத்தீவில் (Mullaitivu) தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ள நிலையில் அவருக்கு இளைஞனொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர் அந்த தொலைபேசியினை திருத்தி திரும்ப பெற்றும் சென்றுள்ளார்.
இருப்பினும், யுவதியால் கொடுக்கப்பட் தொலைபேசியில் இருந்த படங்கள், குறிப்பாக யுவதியின் முக்கிய படங்கள் திருடப்பட்டு இன்னொரு இளைஞனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த இளைஞன் யுவதியினை தொடர்பு கொண்டு அவரின் அந்தரங்க படங்களை அனுப்பி மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் தரப்பினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.