பணவீக்கத்துக்கு எதிரான போரில் வெற்றி! மத்திய கிழக்கு போரினால் அபாயம் – ஐஎம்எப்

25

உலகின் சில நாடுகளில் விலை அழுத்தங்கள் நீடித்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் துறையின் இயக்குநருமான பியர் ஒலீவியர் கோலீஞ்சஸ்( Pierre-Olivier Gourinchas )இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தப் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் குறையும் என்றும் அவர் எதிர்வை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பணவீக்கம் 9.4 சதவீதமாக உயர்ந்த நிலையிலேயே தற்போதைய சரிவு உணரப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்த பணவீக்கம் போக்கு 3.2 சதவீதமாக நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பணவீக்கம் பற்றிய நற்செய்தி இருந்தபோதிலும், எதிர்மறையான அபாயங்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய மோதல்களின் அதிகரிப்பு, குறிப்பாக மத்திய கிழக்கில், பொருட்களின் சந்தைகளுக்கு கடுமையான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.  

Comments are closed.