சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் அந்த திணைக்களத்தில் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத்துறையில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்களில் 108 வாகனங்கள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
மேலும், பாதுகாப்புத்துறையின் போக்குவரத்து மற்றும் கணக்குப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த 444 வாகனங்களில் 82 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பதிவு செய்யப்படாத வாகனங்களின் மதிப்பு பதினான்கு கோடியே ஒரு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்புத்திணைக்களம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
Comments are closed.