அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்! மஹிந்தானந்த

7

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் மிக விரைவில் நாடு பொருளாதார வீழ்ச்சியொன்றை சந்திக்கும் என்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த எதிர்வு கூறலை வௌியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசாங்கத்தின் போக்குகளைப் பார்த்தால் நாடு மிக விரைவில் பொருளாதார வீ்ழ்ச்சியொன்றை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்.

இப்போதைக்கு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றவர்களே அதன் பின்னர் நாட்டைப் பொறுப்பெடுக்க வேண்டியிருக்கும்.

எனவே கண்டி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் சிலிண்டர் சின்னத்துக்கு கூடுதலாக வாக்களித்து கூடுதல் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.