முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தனது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண பெற்ற படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனதிபதியுமானமகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுணவின் வாக்குவங்கியை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், மகிந்த ராஜபக்ஷ பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
அதன் பிரகாரம் நவம்பர் முதலாம் வாரம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியிலான குறிப்பிட்டளவான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.
பொதுத் தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செயற்பாடுகளுக்கும் மகிந்த ராஜபக்ஷ தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.