முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சேவை இந்த நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“ நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது தனி ஒரு ஆளாக சவாலை ஏற்றவர்தான் ரணில் விக்ரமசிங்க. அவர் அன்று சவாலை ஏற்றதால் தான் மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டை ஆள்வதற்குரிய அனுபவம் குறைவு.
எனவே, நாட்டைச் சரியாக வழிநடத்த முடியாமல் பொருளாதாரம் மீண்டும் சரிந்தால், அந்தச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இந்த நாட்டுக்குத் தேவை.” – என்றும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.