கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும்! ஜீவன் தொண்டமான்

8

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் இன்று(18.10.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், “ஜனாதிபதியை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேடவேண்டியதில்லை.

நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் நாட்டு மக்கள் பாரிய கஸ்டத்தை எதிர்நோக்க நேரீடும்.

எனவே நாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேல், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணியின் பொகவந்தலாவ அமைப்பாளர் இளையராஜா, நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கலான மாடசாமி சரோஜா பிரபு, மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Comments are closed.