அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்க தவறியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

8

அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் லாபமீட்டும் நிலையில் எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா வரி அறவீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ள முன்னதாக இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் என ஆனந்த பாலித தெரிவிததுள்ளார்.

பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் தற்பொழுது 11 பில்லியன் ரூபா லாபமீட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

50 ரூபா வரி நீக்கத்துடன் எரிபொருள் ஒரு லீட்டரின் விலையை 82 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.